தலையில் ரத்தம் வடிய வடிய தாக்கிய தலிபான்கள்... காபூலில் ஆஸ்திரேலியருக்கு நேர்ந்த பயங்கரம்! பதற வைக்கும் காட்சி
காபூல் விமான நிலையத்திற்கு செல்ல முயன்ற ஆஸ்திரேலியரை தலிபானகள் சரமாரியாக தாக்கிய காட்கிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 31ம் தேதியோடு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு படைகள் வெளியேற வேண்டும் என தலிபான்கள் எச்சரித்துள்ள நிலையில், மக்களை வெளியேற்றும் பணிகளில் அமெரிக்க, பிரித்தானியா உட்பட வெளிநாடுகள் ஈடுபட்டுள்ளன.
அதேசமயம், மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை திட்டமிட்டு தலிபான் போராளிகள் தடுத்து வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.
அதாவது, காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் தலிபான்கள் மூடியுள்ளனராம்.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு சென்ற ஆஸ்திரேலிய குடிமகனை ரத்தம் சொட்ட சொட்ட தலிபான்கள் சரமாரியாக தாக்கிய காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
குறித்து வீடியோவில், தலிபான்களால் தாக்கப்பட்டு தலையில் இருந்து ரத்தம் வடிய வடிய சம்பவத்தை பதிவு செய்த நபர், தான் ஆஸ்திரேலிய குடிமகன் என கூறுகிறார்.
From another angle, it shows a militant tries to forcefully take his phone. pic.twitter.com/EdsOMtzpot
— Suhrab Sirat (@SuhrabSirat) August 25, 2021
நபர் வீடியோ எடுப்பதை கண்ட தலிபான் போராளி ஒருவர், அவரது மொபைல் போனை பறிக்க முயல்கிறார்.
எனினும் தொடர்ந்து பேசும் பாதிக்கப்பட்ட நபர், விமான நிலையத்தை கடக்கும் போது தலிபான்கள் இவ்வாறு தன்னை தாக்கியதாக கூறுகிறார்.
வீடியோவின் இறுதியில் துப்பாக்கிச் சூடு சத்தத்தை கேட்டு ஆஸ்திரேலியர் கத்தும் சத்தம் கேட்கிறது.
தலிபான்களால் தாக்கப்பட்ட ஆஸ்திரேலிய குடிமகனின் நிலைமை குறித்து தற்போது எந்தவித தகவலும் வெளியாகவில்லை.