வலைப் பயிற்சியின் போது தலையில் தாக்கிய பந்து: இளம் அவுஸ்திரேலிய வீரர் மரணம்!
அவுஸ்திரேலியாவில் பயிற்சியின் போது இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பறிப்போன இளம் வீரர் உயிர்
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த 17 வயது இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் பயிற்சியின் போது பந்து தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று பெர்ன்ட்ரீ கல்லி-யில்(Ferntree Gully) கிரிக்கெட் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பந்து வீசும் கருவி மூலம் வீசப்பட்ட பந்து மோதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

அவர் அப்போது தலைக்கவசம் அணிந்து இருந்தாலும் கழுத்து கவசம்(Neck Guard) அணியாத காரணத்தால் அவருக்கு ஆபத்தான காயம் ஏற்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் வியாழக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது அவுஸ்திரேலிய கிரிக்கெட் சமூகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து பென்னின் தந்தை ஜேஸ் ஆஸ்டின், குடும்பத்தின் ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எங்கள் மகன் பென்னின் இழப்பால் நிலைகுலைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |