10 மீட்டர் உயர நீச்சல் குள மேடை: பயத்தில் நடுங்கிய நபரை மிதித்து தள்ளிய உயிர்க்காப்பாளர்
நீச்சல் குளத்தின் 10 மீட்டர் உயர குதிப்பு மேடையில் இருந்து நபர் ஒருவரை உயிர்க்காப்பாளர் மிதித்து தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிர் காப்பாளரின் செயல்
ஆகஸ்ட் 13ம் திகதி ஆஸ்திரியாவில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் உள்ள 10 மீட்டர் உயர மேடையில் இருந்து தண்ணீரில் குதிப்பதற்காக நபர் ஒருவர் மேலே ஏறியுள்ளார்.
அவர் மேலே ஏறியதும் உயரத்தை கண்டு பீதி அடைந்து கீழே குதிக்கவும் செய்யாமல், கீழே இறங்கியும் வராமல் மேலேயே நின்று பதறியுள்ளார்.
அப்போது அந்த 10 மீட்டர் உயர குதிப்பு மேடையில் நின்ற நீச்சல் குளத்தின் உயிர் காப்பாளர், அந்த நபரை பின்னால் இருந்து மிதித்து தண்ணீரில் தள்ளினார்.
இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீச்சல் குளத்தில் இருந்து நீக்கப்பட்ட உயிர்க்காப்பாளர்
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நீச்சல் குள நிறுவனம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக ஆஸ்திரியன் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்ட உயிர்க்காப்பாளர் அந்த நீச்சல் குளத்தில் பணி செய்வதில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த நிர்வாகிகள் நடத்தப்படும் வேறு குளங்களில் அவர் பணியை தொடருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |