உக்ரைன் ஜனாதிபதியின் சொத்து உட்பட 100 சொத்துக்களை விற்க ரஷ்ய அதிகாரிகள் திட்டம்
கிரிமியா தன்னாட்சிக் குடியரசிலுள்ள 100 சொத்துக்களை விற்க திட்டமிட்டுவருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அவற்றில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு சொந்தமான சொத்தும் ஒன்று!
கிரிமியாவிலுள்ள, தேசிய மயமாக்கப்பட்டுள்ள சொத்துக்களை விரைவில் விற்பனை செய்ய இருப்பதாக கிரிமியாவின் நாடாளுமன்ற சபாநாயகரான Vladimir Konstantinov தெரிவித்துள்ளார்.
கிரிமியாவில் ரஷ்ய அரசால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், சுமார் 500 சொத்துக்களை தேசியமயமாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். அவற்றில் சில உக்ரைன் அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களுக்குச் சொந்தமானவை.
அவற்றில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு சொந்தமான சொத்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.