அய்யோ...வேண்டாம் என கதறிய சிறுவன்! விமானத்தில் ஏறுவதற்கு முன் நடந்த சம்பவம்: மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம்
பிரித்தானியாவை சேர்ந்த 12 வயது சிறுவன் விமான ஊழியர்களால் கொரோனா பரிசோதனை எடுக்க வற்புறுத்தப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியான நிலையில், குறித்த விமான நிறுவனம் இது குறித்து மன்னிப்பு கோரியுள்ளது.
பிரித்தானியாவின் Essex நகரின் Harlow-வை சேர்ந்த 12 வயது மதிக்கத்தக்க Callum Hollingsworth என்ற 12 வயது சிறுவன், கடந்த 3-ஆம் திகதி ஸ்பெயினின் Valencia-வில் இருந்து பிரித்தானியாவிற்கு திரும்புவதற்காக, தன்னுடைய குடும்பத்தினருடன் வந்துள்ளார்.
அப்போது அவர் விமானத்தில் பறக்க வேண்டிய Ryanair விமான ஊழியர்கள் கொரோன பரிசோதனை அவசியம் என்று கூறியுள்ளனர். இதில் குடும்பத்தினருக்கு இருந்த போதிலும், சிறுவனுக்கு இல்லை, ஏனெனில் அவர் ஆட்டிசத்தால் பாதிக்கபட்டவர், அதுமட்டுமின்றி அவருக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அது தொடர்பான விலக்கு கடிதம், அதாவது Granted a medical exemption letter கொடுக்கப்பட்டுள்ளது. அதை காட்டிய போதும், விமான ஊழியர்கள் பயணவழிகாட்டுதலின் படி இது கட்டாயம் என்று கூறியுள்ளனர்.
குடும்பத்தினர் எவ்வளவு கூறியும், இது அவசியம் என்று கூறியுள்ளனர். இதனால் சிறுவனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அப்போது சிறுவன் தனியாக உட்கார வைக்கப்பட்டிருந்தான். அவனுக்கான சோதனை மேற்கொள்ளவிருந்த போது, எனக்கு வேண்டாம், இது மூக்கின் உள்ளே விடும் போது, அது ஒரு மாதிரி இருக்கும் என்பது போல் செய்கை செய்து தலையில் கையை வைத்து அழுகிறான்.
ஆனால் விமான ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒரு வழியாக சிறுவனை சமாதானப்படுத்தி அதை எடுத்துவிடுகின்றனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதால், இது குறித்து விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளதுடன், அந்த சிறுவனுக்கு ஏற்பட்ட மன அழுத்ததிற்கு மன்னிப்பு கோருவதாக கூறியுள்ளது.
இது குறித்து விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மன அழுத்ததிற்கு வருந்துகிறோம்.
அரசுபயணக்கட்டுப்பாடுகளின் விதிமுறைகளையே நாங்கள் முழுமையாக பின்பற்றுகிறோம். பயணிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் தொடர்ந்து மேம்பாடுகளைச் செய்து நடைமுறைகளைச் செயல்படுத்துகிறோம்.
ஒவ்வொரு நாட்டிலும் அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் போது எங்கள் விமான ஊழியர் குழுவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில், அவர்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால், நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என்று கூறியுள்ளார்.