ஜல்லிக்கட்டு போட்டிக்கு 10 முக்கிய கட்டுப்பாடு விதித்த காவல்துறை: அதிகாரிகள் ஆய்வு
பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காவல்துறையினர் 10 முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
பொங்கல் ஜல்லிக்கட்டு
தமிழர் திருநாளாம் தை திங்கள் முதல் நாளில் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஏறு தழுவுதல் தமிழகம் முழுவதும் நடத்தப்படும். அதிலும் மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ் பெற்றவை.
இதில் முதலாவதாக நாளை(ஜனவரி 15) பொங்கல் தினத்தை முன்னிட்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
உயிரிழந்தவர் திரும்பி வந்தால் அதிர்ச்சி: குடும்பத்தினருக்கு சாம்பல் கலசம், இறப்பு சான்றிதழ் அதிகாரிகள்
இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்ததோடு. மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவும் களத்திற்கு நேரில் வந்து மேற்பார்வையிட்டார்.
இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தில் நாளை காலை 7 மணிக்கு நடைபெற இருக்கும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மதுரை மாநகர காவல்துறையினர் 10 முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
10 முக்கிய கட்டுப்பாடுகள்
- இன்று(ஜனவரி 14) நள்ளிரவு 12 மணி முதல் போட்டிகளில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
- வெள்ளக்கல் ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு, முத்துப்பட்டி சாலை வழியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு முத்துப்பட்டி சந்திப்பு வரை மட்டுமே அனுமதி.
- வாகனங்களையும் அங்கே நிறுத்திக் கொள்ளலாம். காளைகள், உரிமையாளர்கள், மற்றும் அவருக்கு உதவியாக ஒருவர் மட்டுமே ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் வரிசையில் நிற்க அனுமதி.
- மாவட்ட நிர்வாகம் அனுமதித்த அனுமதிச்சீட்டுகளுடன் வரும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- மாடுபிடி வீரர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு மற்றும் உரிய மருத்துவ தகுதிச் சான்று கொண்டுவரவேண்டும்.
- மாடுபிடி வீரர்கள் மது போதையில் இருக்க கூடாது, மீறினால் சட்ட நடவடிக்கை.
- காளைகளுடன் வரும் உரிமையாளரும் உதவியாளரும் மது போதையில் இருக்க கூடாது.
- போட்டியின் போது காளைகளின் மூக்கணாங்கயிறை அறுக்க உரிமையாளர்கள் கத்தி அல்லது கூர்மையான பொருட்கள் எதையும் கொண்டு வரக்கூடாது.
- ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் உள்ள வீட்டின் மாடிகளில் வீட்டின் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி. வெளி நபர்கள் வீட்டின் மாடியில் தங்க அனுமதி இல்லை.
- மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காளைகளின் மூக்கணாங்கயிறுகளை நீக்குவதற்கு தேவையான உபகரணங்களுடன் உரிய பயிற்சி பெற்ற அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவனியாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 10 மதுக்கடைகளும், அலங்காநல்லூரை சுற்றியுள்ள 7 மதுக்கடைகளும் மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |