கருப்பாக இருக்கும் சருமத்தை சிவப்பாக மாற்றும் எண்ணெய்; ஒரு சொட்டு இருந்தால் போதும்...!
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஒரு சில பெண்கள் தங்களது சருமத்தை சீராக பராமரித்துக்கொண்டால் போதும் என நினைப்பார்கள்.
ஒரு சில பெண்கள் தங்களை வெள்ளையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். அதற்காக ஒரு சில கிறீம்களை கடைகளில் வாங்கி பயன்படுத்துவதும் உண்டு.
ஆனால் அது அனைத்தும் நிரந்தமாக இருப்பதில்லை. இது சருமத்தில் ஒவ்வாமை ஏற்படுத்துகிறது. எனவே வீட்டில் இருக்கும் அவகேடோ பழத்தை பயன்படுத்தி எப்படி முகத்தை வெள்ளையாக மாற்றிக்கொள்ளலாம் என பார்க்கலாம்.
வறண்ட சருமத்திற்கு
இந்த பழத்தில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, இது சருமத்தை ஊட்டமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது சருமத்தை நீரேற்றமாகவும் ஈரப்பதமாகவும் நீண்ட நேரம் வைத்திருக்க உதவுகிறது.
முகப்பரு தீர்விற்கு
இந்த பழம் முகப்பரு, அரிக்கும் தோலழற்சி, வறண்ட சருமம் போன்ற வீக்கத்தைத் தணிக்கும் திறன் கொண்டது.
இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நல்ல தோல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், எரிச்சலில் இருந்து சருமத்தை விடுவிக்கவும் உதவுகிறது.
முதுமையைத் தடுக்கும்
இந்த பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ மற்றும் ஒலிக் அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
இது சருமத்தில் ஏற்படும் சருக்கத்தை குறைத்து, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
நகங்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்
அவகேடோ எண்ணெய் நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது நகங்கள் உடையாமல் இருப்பதற்கு உதவுகிறது.
அவகேடோ எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம்?
- அவகேடோ எண்ணெயை சில துளி எடுத்து சருமத்தில் நேரடியாக பயன்படுத்தவும்.
-
பின் மென்மையாக மசாஜ் செய்யவும்.
- கைகளில் மாய்சுரைசராக பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |