உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க திட்டமிட்டுள்ள ரஷ்யாவின் நட்பு நாடு
ரஷ்யாவின் நட்பு நாடொன்று, தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்க திட்டமிட்டுள்ளது.
அசர்பைஜான் நாட்டின் அரசியல் நிலைமை தற்போது முக்கிய மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
ரஷ்யா நடத்திய தாக்குதல்களால், உக்ரைனில் உள்ள அசர்பைஜானுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் எண்ணெய் வளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் அசர்பைஜான் தனது நடுநிலையான நிலைப்பாட்டை மாற்றி, உக்ரைனுக்கு ஆயுத உதவியை வழங்கும் திட்டத்தை பரிசீலிக்கவுள்ளது.
முன்னதாக, ரஷ்யாவும் அசர்பைஜானும் நெருக்கமான கூட்டாளிகளாக கருதப்பட்டனர். ஆனால், சமீபத்திய ரஷ்யாவின் தாக்குதல்கள் இரு நாடுகளின் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதால், அசர்பைஜான் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதனிடையே, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அசர்பைஜானுடன் இராணுவ ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Azerbaijan Ukraine weapons, Russia drone attacks Ukraine, Zelensky military cooperation, Azerbaijan foreign policy shift, Russian strikes on Azerbaijan energy assets, Ukraine war latest news, Putin ally Ukraine support, Global response to Russia