இந்தியா எங்களை பழிவாங்குகிறது - SCO மாநாட்டில் அஜர்பைஜான் குற்றச்சாட்டு
இந்தியா எங்களை பழிவாங்குவதாக SCO மாநாட்டில் அஜர்பைஜான் குற்றச்சாட்டியுள்ளது.
பாகிஸ்தானை ஆதரிக்கும் அஜர்பைஜான்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியழித்தது.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலின் போது, துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன.
இதன் காரணமாக இந்த இரு நாடுகளுடன் வணிகம் செய்வதை இந்தியர்கள் தவிர்த்தனர். மேலும், அங்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டருந்தவர்கள் பயணத்தை ரத்து செய்தனர். இதன் காரணமாக இரு நாடுகளும் பாரிய பொருளாதார இழப்பை சந்தித்தது.
இந்தியா பழிவாங்குகிறது
இந்நிலையில், இந்தியா தங்களை பழிவாங்குவதாக SCO மாநாட்டில் அஜர்பைஜான் குற்றஞ்சாட்டியுள்ளது.
சீனாவில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி SCO மாநாடு நடைபெற்றது. இதில், இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், அஜர்பைஜான் உள்ளிட்ட பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், கலந்து கொண்டு பின்னர் பேசிய அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ், "SCO அமைப்பில் அஜர்பைஜான் நிரந்தர உறுப்பினர் ஆகுவதை இந்தியா எதிர்க்கிறது.
பாகிஸ்தானுடனான நட்புணர்வு காரணமாக உலக மன்றங்களில் அஜர்பைஜானை இந்தியா பழிவாங்க முயற்சிக்கிறது. இதன் மூலம், இந்தியா பன்முக ராஜதந்திர கொள்கைகளை மீறுகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், இந்தியா உலக அரங்கில் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அஜர்பைஜான் பாகிஸ்தானுடனான சகோதரத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கும். பாகிஸ்தானுடனான அஜர்பைஜானின் உறவு, நெருக்கமான அரசியல் மற்றும் கலாச்சார உறவுகளில் வேரூன்றியுள்ளது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |