2025-ல் பலிக்க தொடங்கிய பாபா வாங்காவின் கணிப்பு: 2வதும் நடந்துவிட்டதே
பாபா வங்கா
பால்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பாபா வங்கா, 1911ஆம் ஆண்டில் பல்கேரியா நாட்டில் பிறந்து, 1996ஆம் ஆண்டில் மரணமடைந்தவர்.
சிறு வயதிலேயே தனது கண்பார்வையை இழந்த பாபா வங்கா, அதன் பிறகு எதிர்காலத்தை கணிக்கும் திறனை பெற்றுள்ளதாக கூறுகிறார்.
இதன்படி, 9/11 இரட்டைக்கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம், கோவிட் என இவரது பல்வேறு கணிப்புகள் நடந்துள்ளதால், பாபா வங்கா உலகளவில் கவனம் பெற்றார்.
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு குறித்தும் சில கணிப்புகளை பாபா வங்கா வெளியிட்டுள்ளார்.
உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி
உலகளவில் பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும் என கணித்திருந்தார். அவர் சொன்ன கணிப்பு மீண்டும் சரியாக நடந்துள்ளது.
அதே போல், அமெரிக்கா அதிபர் டோனல்ட் டிரம்ப், உலக நாடுகளின் மீது பரஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தினார். இதனால் பல நாடுகளின் பங்கு சந்தைகளில் பெரிய இழப்பு ஏற்பட்டது.
இந்த வரி விதிப்பை டிரம்ப் அறிவித்த மறுநாளிலே, உலக பணக்காரர்கள் பல மில்லியன் டொலர்கள் இழப்பை சந்தித்தனர்.
மேலும், இதன் மூலம் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, விலைவாசி கடுமையாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இயற்கை பேரழிவு
இது மனித குல வீழ்ச்சியின் தொடக்கமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகளவிலான பூகம்பங்கள் காரணமாக, பெரும் இயற்கை பேரழிவு நிகழும் எனவும் கணித்துள்ளார்.
இதன்படி, மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம், 2025 ஆம் ஆண்டு தொடர்பாக, பாபா வாங்கவின் 2 கணிப்புகள் நடந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |