2043-ல் ஐரோப்பாவை ஆளப்போகும் இஸ்லாம்., பாபா வங்காவின் அதிர்ச்சிகர கணிப்பு
2043-ல் ஐரோப்பாவை இஸ்லாம் ஆளப்போவதாக கூறும் பாபா வங்காவின் கணிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025-ஆண்டு நடந்து கொண்டிருக்கும் நிலையிலும், புகழ்பெற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்புகள் மீண்டும் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.
குறிப்பாக, 2025-ல் ஐரோப்பாவில் பெரும் யுத்தம் வெடிக்கும் என்றும், இது கண்டத்தின் மக்களை பெரிதும் குறைக்கும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1911-ல் பிறந்த பாபா வங்கா, சிறு வயதில் பார்வையை இழந்தார். உலக யுத்த காலங்களில் பிரபலமான அவர், பல முன்கணிப்புகளை நிகழ்த்தியதாக அவரது விசுவாசிகள் நம்புகின்றனர். 1996-ல் மார்பகப் புற்றுநோயால் உயிரிழந்தார்.
தற்போது, அவரின் கணிப்புகளில் ஒன்று, 2043-ல் ஐரோப்பாவில் முஸ்லிம் ஆட்சி ஏற்படும் என்பதாகும்.
இது ஜேர்மனியை போன்ற நாடுகளில் கிறிஸ்தவர் எண்ணிக்கை குறைவதோடு, இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரிப்பதால் ஏற்படும் கலாசார மாற்றங்களைக் குறிக்கலாம் என நம்பப்படுகிறது.
மேலும், 2299-ல் பிரான்ஸில் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக இடம்பெறும் பகிரங்க போர், மற்றும் ஈரானில் தோன்றும் முஸ்லிம் அரசியல் வளர்ச்சி ஜேர்மனிக்கு விரிவடையும் என்ற கூற்றும் அவரது கணிப்புகளில் இடம்பெற்றுள்ளன.
2076-ல் கம்யூனிஸம் மீண்டும் உலகளவில் எழுச்சி பெறும் என்றும், 5079-ல் உலகம் பெரும் இயற்கை பேரழிவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவரது கூற்றுகள் பலரும் விவாதிக்கும் வகையில் உள்ளன. விசுவாசிகள் சில நிகழ்வுகள் உண்மை ஆகியுள்ளன என நம்புகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |