பிறக்கும் புத்தாண்டில்... பாபா வங்காவின் கணிப்பு: புடினுக்கு பதிலாக புதிய ரஷ்யத் தலைவர்
அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தாக்குதலை கணித்திருந்த பாபா வங்கா, தற்போது 2026ல் உலகப் போருக்கான வாய்ப்புகள் குறித்து எச்சரித்துள்ளார்.
உலகளாவிய பதட்டங்கள்
2026-ஆம் ஆண்டில் உலகின் முக்கிய வல்லரசுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய அளவிலான போர் தொடங்கும் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.

இந்த மோதல் கண்டங்கள் முழுவதும் பரவி, அரசியல் ஸ்திரமின்மை மற்றும் அதிகரித்த உலகளாவிய பதட்டங்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தைத் தூண்டிவிடும்.
பிறக்கும் புத்தாண்டில் சீனா தைவானைக் கைப்பற்றும், இதன் காரணமாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ளார்.
மட்டுமின்றி, இது, மூன்றாவது உலகளாவிய நிதி நெருக்கடி பற்றிய மற்றொரு கணிப்புடன், அல்லது குறைந்தபட்சம் 2026-ல் ஒரு பெரிய பொருளாதார மந்தநிலை பற்றிய முன்னறிவிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றே கூறுகின்றனர்.

ரஷ்ய ஆளுமை
இதன் விளைவாக சந்தை வீழ்ச்சிகள், அதிக பணவீக்கம் அல்லது நாணயத்தின் மதிப்பு சரிவு ஏற்படலாம் என்றும் குறிப்பிடுகின்றனர். 2026-ல் விளாடிமிர் புடினுக்கு பதிலாக ஒரு புதிய ரஷ்யத் தலைவர் உருவாவார் என்றும் கணித்துள்ளார்.

உலக அரசியலை மாற்றியமைக்கப் போகும் அந்த சக்திவாய்ந்த ரஷ்ய ஆளுமை, பொதுவாக ஆசான் அல்லது உலகத் தலைவர் என்று குறிப்பிடப்படுகிறார். அவர் 2026-ஆம் ஆண்டில் ஆதிக்க நிலைக்கு உயர்வார் என்றும் பாபா வங்காவின் கணிப்புகள் குறிப்பிடப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |