மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள்
இளவரசி டயானாவின் மரணம் முதல் கோவிட் வரையிலான பல்வேறு விடயங்களை முன்கூட்டியே துல்லியமாகக் கணித்த பாபா வங்கா, 2026ஆம் ஆண்டைக் குறித்து கணித்துள்ள சில விடயங்கள் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள்
2026ஆம் ஆண்டிலும், உலகின் பல பாகங்களில், நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் பயங்கர பருவநிலை மாற்றங்கள் போன்ற இயற்கைப் பேரழிவுகள் தாக்கப்போவதாக கணித்துள்ளார் பாபா.
பூமியின் நிலப்பரப்பில் 7 முதல் 8 சதவிகிதம் சேதமடையலாம் என்றும் அதனால் சூழல் மண்டலம் முதல் உள்கட்டமைப்பு வரை பல் விடயங்கள் அழியக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார் பாபா.
எல்லாவற்றையும் விட அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவென்றால், 2026 மூன்றாம் உலகப்போர் துவங்கும் ஆண்டாக இருக்கக்கூடும் என பாபா கணித்துள்ளார்.
மனித குலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI
பாபாவின் கணிப்புகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மற்றொரு விடயம் AI என்னும் செயற்கை நுண்ணறிவு மனித குலத்தை மேற்கொள்ளும், அல்லது கட்டுப்படுத்தும் என கணித்துள்ளார் பாபா.
வேறுவகையில் கூறினால், ரோபோக்கள் மனிதர்களின் வேலை, உறவுகள் மற்றும் உயிரையும் பறிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார் பாபா.
Getty
மேலும், 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஏலியன்களுடன் உலகம் முதன்முறையாக தொடர்புகொள்ளும் என்றும் கணித்துள்ள பாபா, பெரிய விண்வெளிக்கப்பல் ஒன்று வரும் என்றும் அது நம்முடன் தொடர்புகொள்ளும் என்றும் கூறியுள்ளார்.
விடயம் என்னவென்றால், ஒரு அபூர்வ வால்நட்சத்திரம் ஒன்று பூமியை நோக்கி வருவதாக நாசா ஏற்கனவே எச்சரித்துள்ளது. ஆனால், அதுதான் பாபா கூறிய ஏலியன்களை சுமந்துவரும் விண்வெளிக்கப்பலா என்பது யாருக்கும் தெரியாது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |