பூமியை தாக்கும் அசுர சூறாவளி! அச்சுறுத்தும் பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்கள்
பூமியை தாக்க அசுர சூறாவளி ஒன்று தயாராகி வருவதாக பாபா வங்காவின் தீர்க்கதரிசனம் எச்சரித்துள்ளது.
அசுர சூறாவளி(Cannibal Storm)
மறைந்த பல்கேரிய ஜோதிடரான பாபா வங்கா, சில நேரங்களில் “பால்கன் நாஸ்டர்டாமஸ்” என அழைக்கப்படும் அவரது பேரழிவு தீர்க்கதரிசனத்தால் கவனம் பெறுவார்.
இவ்வாறு அவர் கடந்த 2023ம் ஆண்டு “அசுர சூறாவளி” ஒன்று பூமியை தாக்கும் என்று தனது தீர்க்கதரிசனத்தை வெளியிட்டு இருந்தார்.

ஆனால் அது அப்போது நிகழாமல் போயிருந்தாலும், தற்போது தீவிர விண்வெளி வானிலைகள் அவரது மர்மமான தீர்க்கதரிசனத்திற்¯கு மீண்டும் உயிரூட்டி உள்ளது.
அசுர சூறாவளி(Cannibal Storm) என்பது அசாதாரணமான மற்றும் சக்தி வாய்ந்த சூரிய நிகழ்வு(சூரிய புயல்) என்பது குறிப்பிடத்தக்கது.
நிபுணர்கள் எச்சரிக்கை
பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு மைய நிபுணர்கள், பாபா வங்காவின் தீர்க்கதரிசனத்துடன் ஒத்து போக கூடிய கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத சக்தி வாய்ந்த சூரியப் புயல் ஒன்று பூமியை தாக்க நெருங்கி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த அசாதாரண நிகழ்வின் போது, தொழில்நுட்பங்களிடையே சூரிய புயல் தலையிட்டு மிகப்பெரிய தகவல் தொடர்புகள் மற்றும் செயற்கைக்கோள் அமைப்புகளை சீர்குலைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூரிய புயல் அசாதாரணமான அசுர சூறாவளியாக(Cannibal Storm) மாறும் அபாயம் கொண்டது தான் இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |