2025யில் ஒரு போரில் பல நாடுகள் அழிக்கப்படலாம்! அதிரவைத்த பாபா வாங்காவின் கணிப்பு
பொருளாதார கொந்தளிப்பு, தீவிர வானிலை, பேரழிவு நிகழ்வுகள் இந்த ஆண்டில் ஏற்படலாம் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.
வலுவான நிலநடுக்கம்
பாபா வாங்காவின் கணிப்புகளான வறட்சி, வெள்ளம், பூகம்பம் மற்றும் அசாதாரண வெப்பநிலை உயர்வுகள் சமீபத்தில் அரங்கேறின.
குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதேபோல் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.
இதனையடுத்து 2025யில் என்னென்ன நிகழ்வுகள் ஏற்படும் என்கிற பாபா வாங்காவின் கணிப்புகள் அதிர வைக்கும் வகையில் உள்ளன.
இந்த ஆண்டில் ஒரு பாரிய போர் நிகழும் என்றும், பல நாடுகள் அழிக்கப்படலாம் என்றும் எச்சரித்திருந்தார். அவர் எந்த நாட்டையும் குறிப்பிடவில்லை என்றாலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான சாத்தியமான போரை அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் உள்ளன.
ஏனெனில், கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது.
பொருளாதார நெருக்கடி அபாயம்
பாபா வாங்கா பொருளாதார கொந்தளிப்பு குறித்து கணித்தது போலவே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பல நாடுகளுடன் வரி போர்களைத் தொடங்கினார்.
இது உலகளவில் பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதுடன் பொருளாதார நெருக்கடியையும் உண்டாக்கும் அபாயம் உள்ளது.
அத்துடன் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் எரிமலைகள் வெடிப்பது மற்றும் பூகம்பங்கள் ஏற்படுவது குறித்தும் பாபா வாங்கா எச்சரித்தார்.
அதன்படியே ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம், அமெரிக்கா மற்றும் ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |