பாகிஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!
பாகிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடித்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு
சனிக்கிழமை பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கிரிக்கெட் மைதானம் ஒன்றில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
🚨 Blast in Pakistan Cricket Stadium 🚨
— CricketGully (@thecricketgully) September 7, 2025
Blast in Kausar Cricket Ground in Bajaur district of Khyber Pakhtunkhwa in Pakistan. One Person Killed and Many of them are injured.pic.twitter.com/wzFEW8nPjx
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதுடன், குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை
காவல் அதிகாரி வகஸ் ரஃபிக் வழங்கிய தகவலில், பஜெளர் மாவட்டத்தின் கெளசர் கிரிக்கெட் மைதானத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
IED என்ற மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் மூலமாக இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து இருப்பதாக டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |