பிக்பாஷ் முதல் போட்டி: படுமோசமாக சொதப்பிய பாபர் அஸாம்
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான பிக்பாஷ் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் 11 ஓவர்களில் 113 ஓட்டங்கள் குவித்தது.
11 ஓவர்கள் போட்டி
சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான பிக்பாஷ் 2025 தொடரின் முதல் போட்டி நடந்து வருகிறது.
BABAR AZAM OUT FOR 2!#BBL15 pic.twitter.com/fqRiu8mewK
— KFC Big Bash League (@BBL) December 14, 2025
மழை காரணமாக ஆட்டம் தொடங்க தாமதமானது. பின்னர் 11 ஓவர்கள் போட்டியாக மாற்றியமைக்கப்பட்டது.
நாணய சுழற்சியில் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி முதலில் துடுப்பாடியது. டேனியல் ஹூக்ஸ் டக்அவுட் ஆகி வெளியேற, பாபர் அஸாம் (Babar Azam) ஓட்டங்கள் எடுக்க தடுமாறினார்.
பாபர் அஸாம் சொதப்பல்
மொத்தம் 5 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 2 ஓட்டங்களில் எவன்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 
பின்னர் வந்த பிலிப் 18 ஓட்டங்களில் 28 ஓட்டங்களும், ஜேக் எட்வர்ட்ஸ் (Jake Edwards) 21 பந்துகளில் 46 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) விளாசினர்.
இதன்மூலம் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 11 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ஓட்டங்கள் குவித்தது.
Cooper Connolly goes BANG, BANG!
— KFC Big Bash League (@BBL) December 14, 2025
Consecutive sixes off Todd Murphy at The Furnace. #BBL15 #GoldenMoment pic.twitter.com/7Xe2pbq9ES
பின்னர் ஆடிய பெர்த் அணி 10.1 ஓவரில் 117 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கூப்பர் கோனாலி 5 சிக்ஸர்களுடன் 59 (31) ஓட்டங்கள் விளாசினார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |