மார்பில் குழந்தை... இடுப்பில் வெடிகுண்டு பெல்ட்: கணவனுக்காக பழிவாங்க மனிதவெடிகுண்டாக மாறிய பெண்
துனிசியா நாட்டில், தன் கணவனை பாதுகாப்புப் படைகள் கொன்றதற்கு பழிவாங்குவதற்காக, மனித வெடிகுண்டாக மாறினார் ஒரு பெண்.
Mount Selloum என்ற இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அங்கு பாதுகாப்புப் படைகள் நடத்திய ரெய்டு ஒன்றில் கொல்லப்பட்ட தன் கணவனுக்காக பழிவாங்குவதற்காக அந்த பெண் மனித வெடிகுண்டாக மாறியுள்ளார்.
அந்தப் பெண், பாதுகாப்புப் படைகள் நெருங்கும்போது, தன் குழந்தையையும் சேர்த்து தன்னுடன் கட்டிக்கொண்டு, இடுப்பில் கட்டிய வெடிகுண்டு பெல்ட்டை இயக்கி வெடிக்கச் செய்துள்ளார்.
அந்த வெடிகுண்டு வெடித்ததில் அந்த பெண்ணும், அவரது குழந்தையும் உடல் சிதறி பலியானதோடு, அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த மற்றொரு சிறுமியும் படுகாயமடைந்துள்ளார்.
துனிசியாவில் Mount Selloum என்பது, ஜிகாதிகள் பதுங்கியிருக்கும் ஒரு இடம் என்பது குறிப்பிடத்தக்கது.


