கருத்துக்கணிப்பை மாற்றும் இந்தியா கூட்டணி.., வடக்கில் பாஜகவுக்கு பின்னடைவு
இந்தியாவில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வரும் நிலையில் முன்னணி நிலவரங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின்படி பாஜகவின் கூட்டணி 350 இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டது.
ஆனால், இதனை காங்கிரஸ் கட்சி மறுத்து மக்களிடையே பொய்யான கருத்துக்கணிப்புகளை பாஜக திணிக்கிறது என்று தெரிவித்தது.
9 மணி நிலவரம்
இந்நிலையில், வடக்கில் முக்கிய மாநிலங்களாக பார்க்கப்படும் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதாவது காலை 9.00 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதில், ராஜஸ்தானில் 7 இடங்களிலும், உத்தரப்பிரதேசத்தில் 5 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 10 இடங்களிலும் காங்கிரஸின் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.
அதாவது, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் படி உத்தரப் பிரதேசத்தில் 60 முதல் 71 இடங்களை பாஜக வெல்லும் என்றும் இந்தியா கூட்டணி 10 இடங்களை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டது.
அதேபோல, ராஜஸ்தானில் உள்ள 25 இடங்களில் 20 வரை பாஜக கூட்டணி வெல்லும் என்றும் மகாராஷ்டிராவில் உள்ள 48 இடங்களில் 22 முதல் 35 இடங்களை பாஜக கூட்டணி வெல்லும் என்றும் கணிக்கப்பட்டது.
ஆனால், அதற்கு எதிர்மாறாக பாஜக கூட்டணி பின்னடைவை சந்தித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |