பஹாமஸில் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்: 10 பேர் வரை உயிரிழப்பு
பஹாமஸில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்
பிளமிங்கோ ஏர் விமான சேவை நிறுவனத்தின் சிறிய ரக விமானம் பஹாமஸில் விபத்துக்குள்ளானதில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்த விமான விபத்து சம்பவம் தலைநகர் நஸ்ஸாவிற்கு மேற்கே உள்ள கடற்கரையை ஒட்டிய வடக்கு ஆண்ட்ரோஸில் பகுதியில் நடைபெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்தில் ஒருவர் உயிர் தப்பி இருப்பதாக காவல்துறை தனக்கு தகவல் தெரிவித்து இருப்பதாக பஹாமிய பிரதமர் பிலிப் பிரேவ் டேவிஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காகவும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்காகவும் நானும் என்னுடைய மனைவியும் பிரார்த்திக்கிறோம் என்றும் பிரதமர் டேவிஸ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விமான நிறுவனத்தின் உரிமம் ரத்து
விபத்து தொடர்பான விசாரணையை அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிளமிங்கோ ஏர் விமான சேவை நிறுவனத்தின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதுடன், அந்த நிறுவனத்தின் விமான இயக்க சான்றிதழும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமே என்று அந்நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |