மைதானத்தில் நுழைந்த போராட்டக்காரரை தூக்கிய வீரர்! வைரல் வீடியோவின் முழு பின்னணி
ஆஷஸ் போட்டியின்போது மைதானத்தில் நுழைந்த போராட்டக்காரர் ஒருவரை, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் தூக்கிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஷஸ் 2வது டெஸ்ட்
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் இரண்டாவது போட்டி இன்று தொடங்கியது. அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை துவங்கிய நிலையில், இரண்டாவது ஓவர் தொடங்கும் முன்பு மைதானத்தில் திடீரென இருவர் நுழைந்து 'Just stop oil' என கோஷமிட்டு கையில் வைத்திருந்த பொடியை அள்ளி தூவினர்.
இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. உடனே இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவ், இருவரில் ஒருவரை அலேக்காக தூக்கிச் சென்று பவுண்டரி எல்லைக்குள் விட்டார்.
JONNY BAIRSTOW HAS CAUGHT ONE! #Ashes2023 pic.twitter.com/pgGsZ3xgiB
— Cricket.com (@weRcricket) June 28, 2023
Just Stop Oil அமைப்பினர்
பின்னர் கறையான தனது உடையை மாற்றிக் கொண்டு களத்திற்கு திரும்பினார். கோஷமிட்ட இருவரும் Just Stop Oil எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
குறித்த இரு நபர்களும் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. பேர்ஸ்டோவ் போராட்டக்காரரைத் தூக்கிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Reuters
செய்தித் தொடர்பாளர்
இந்நிகழ்வு குறித்து Just Stop Oil அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'கிரிக்கெட் நமது தேசிய பாரம்பரியத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். ஆனால் கிரிக்கெட் உலகின் பெரும்பகுதி மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக மாறி வரும் நிலையில், இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டியை எப்படி மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்? நாம் விளையாடும் விளையாட்டு, உண்ணும் உணவு மற்றும் நாம் போற்றும் கலாச்சாரம் ஆகியவை ஆபத்தில் இருக்கும்போது நம்மை நாமே திசை திருப்ப முடியாது.
கிரிக்கெட் ரசிகர்களும் இந்த சூழலின் தீவிரத்தைப் புரிந்துகொள்பவர்களும் வீதியில் இறங்கி சட்டவிரோதமான, குற்றவியல் அரசாங்கத்திடம் நடவடிக்கை எடுக்கக் கோர வேண்டிய நேரமிது' என தெரிவித்துள்ளார்.
Getty Images
பிரித்தானியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Just Stop Oil அமைப்பினர், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |