துஷ்பிரயோக புகாரில் சிக்கியவரின் உறவினருக்கே தலைவர் பொறுப்பா? பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுத்த மல்யுத்த வீரர்
மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக சஞ்சய் சிங் தெரிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துஷ்பிரயோக குற்றச்சாட்டு
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் மீது, மல்யுத்த வீராங்கனைகள் துஷ்பிரயோக குற்றச்சாட்டினை முன்வைத்து புகார் அளித்தது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நடந்தது.
இதில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
AP
சாக்ஷி மாலிக் கண்ணீர்
இதற்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அத்துடன் வீராங்கனை சாக்ஷி மாலிக், துஷ்பிரயோக குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினாரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை என்னால் ஏற்க முடியாது.
मैं अपना पद्मश्री पुरस्कार प्रधानमंत्री जी को वापस लौटा रहा हूँ. कहने के लिए बस मेरा यह पत्र है. यही मेरी स्टेटमेंट है। ?? pic.twitter.com/PYfA9KhUg9
— Bajrang Punia ?? (@BajrangPunia) December 22, 2023
எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என கண்ணீருடன் கூறினார். இதனைத் தொடர்ந்து சாக்ஷி மாலிக்கிற்கு ஆதரவாக பேசிய மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா, தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என பிரதமரை குறிப்பிட்டு ட்வீட் செய்தார்.
File Pic
பிரியங்கா காந்தியுடன் சந்திப்பு
அவரது பதிவில், ''புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு எனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன்'' என காட்டமாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் இவ்விவகாரம் குறித்து பேசியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |