ஐரோப்பிய நாடொன்றிற்குள் நுழைந்த 25 ராட்சத பலூன்களால் பரபரப்பு: விமான சேவை நிறுத்தம்
டென்மார்க், நோர்வே மற்றும் ஜேர்மனியின் விமான நிலையங்கள் மீது மர்ம ட்ரோன்கள் பறந்த விடயம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், லிதுவேனியா நாட்டின் விமான நிலையத்துக்குள் ராட்சத பலூன்கள் நுழைந்த விடயம் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.
லிதுவேனியாவுக்குள் நுழைந்த 25 ராட்சத பலூன்கள்
பெலாரஸ் நாட்டிலிருந்து லிதுவேனியாவுக்குள் நுழைந்த 25 ராட்சத பலூன்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அவற்றில் இரண்டு, விமான நிலையத்துக்குள் நுழைந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது.
30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, சுமார் 6,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதற்கிடையில், வார இறுதியில் லிதுவேனியா நாட்டின் தலைநகரான Vilnius நகரில் கைப்பற்றப்பட்ட அந்த பலூன்களில் பதினொன்றில் 18,000 பாக்கெட், கருப்புச் சந்தையில் விற்கப்படும் சிகரெட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |