14 வயது சிறுவன் செய்த பயங்கர செயல்: மூன்று பேர் பலி: வெளிநாடொன்றில் பரபரப்பு
தாய்லாந்து நாட்டில் 14 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சற்று முன் நடந்த சம்பவம்
தாய்லாந்து தலைநகர் பாங்காகில், சற்று முன், அதாவது உள்ளூர் நேரப்படி 5.06 மணியளவில், luxury Siam Paragon Mall என்னும் மாலில், 14 வயது சிறுவன் ஒருவன் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான்.
பொதுவாக, வயது வராத குற்றவாளிகளின் பெயரோ, புகைப்படமோ ஊடகங்களில் வெளியிடப்படாது. ஆனால், தாய்லாந்து ஊடகம் ஒன்று, அந்த சிறுவனுடைய பள்ளி அடையாள அட்டையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அந்தச் சிறுவனின் பெயர் Parit ’Indy’ Taluthatsanawin என அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
மூன்று பேர் பலி
அந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேர் பலியானதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள்.
சிறப்புப் படை பொலிசார் அந்த சிறுவனை கைது செய்துள்ளார்கள். பொலிசார் ஒருவர் அந்தச் சிறுவனைக் கைது செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அந்த மாலிலிருந்து ஏராளமானோர் வெளியே ஓடி வரும் காட்சிகள் அடங்கிய வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
அந்த சிறுவன் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினான், அவனுக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
BREAKING: Thailand police responding to reports of shooting in Siam Paragon shopping mall in Bangkok pic.twitter.com/eG9fx1bxUk
— Insider Paper (@TheInsiderPaper) October 3, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |