21 மனைவிகளுடன் வாழும் யாசகர் ; தினமும் ஒரு மனைவியுடன் சென்று யாசகம்
bangladesh begger lives with 21 wives: தேசிய சராசரியை விட அதிக வருமானம் ஈட்டுபவர்கள் கூட, வாழ்க்கை செலவுகளை சமாளிக்க முடியாது என திருமணம் செய்யவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும் யோசித்து வருகின்றனர்.
இதனால், பல்வேறு நாடுகள் திருமணம் செய்தால் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளன.
ஆனால், யாசகம் பெற்று வாழும் ஒருவர் 21 மனைவிகளை திருமனம் செய்து வாழ்ந்து வருகிறார்.
21 மனைவிகளுடன் வாழும் யாசகர்
வங்கதேசத்தை சேர்ந்த 35 வயதான மோரு மியா (Moru Mia) என்பவர் முழு நேரம் யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில், இவர் தனக்கு 21 மனைவிகள் உள்ளதாக கூறியது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இவர் யாரையும் தேடி செல்லவில்லை எனவும் 21 பெண்களும் தன்னை தேடி வந்து திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார்கள் என தெரிவித்துள்ளார். இதில் சிலர் அவரை விட வயதில் மூத்தவர்கள்.
"அவர்களுக்கு என்னிடம் என்ன பிடித்திருக்கிறது என்று எனக்குத் தெரியாது. அதற்கு அவர்கள்தான் பதிலளிக்க வேண்டும். பெண்கள் என்னிடம் வந்து திருமணம் செய்துகொள்ளக் கேட்கிறார்கள்" என்று மோரு மியா கூறினார்.
For Meru Mia (35), it is a big problem to remember the names of his wives Because he is married to 21 women, and he just remembers 8 of their names He is a beggar, he earns his living from begging Each day, he rotates schedules and takes one of his wives along with him while he begs
— Tushar ॐ♫₹ (@Tushar_KN) October 6, 2026
திருமண முன்மொழிவை நிராகரித்தால் அவர்களுக்கு மரியாதை குறைவாக இருக்கும் என்பதால் அனைத்து திருமண முன்மொழிவையும் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
யாசகம் பெறுவதே அவரது ஒரே வருமானம் ஆதாரமாக உள்ளது. 21 மனைவிகள் இருந்தாலும், ஒரு அறை கொண்ட குடிசை வீட்டிலே வாழ்வதாக தெரிவித்துள்ளார்.
21 மனைவிகளின் பெயர்களையும் கூறுமாறு கேட்டபோது, மோருவால் ஷீலா, நர்கிஸ், செலினா, ஆலியா, தாரா, ஜோத்ஸ்னா, ராபியா மற்றும் பருல் என சிலரை மட்டுமே அவரால் நினைவுகூர முடிந்தது.
இத்தனை மனைவிகள் இருப்பதால் அனைவரையும் நினைவில் வைத்திருப்பது சவாலானது என்பதை அவரே ஒப்புக்கொண்டார்.
21 மனைவிகள் இருந்தாலும், தினமும் ஷிப்ட் முறையில் ஒரு மனைவியுடன் யாசகம் பெற செல்கிறார்.