பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்களை வாங்கும் ஆசிய நாடு: உறவை வலுப்படுத்தும் முயற்சி தீவிரம்
பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானம்
வங்கதேசம், பாகிஸ்தானிடம் இருந்து JF-17 Thunder ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்கள் மட்டுமின்றி போர் விமானிகளுக்கான சண்டை பயிற்சியை வழங்கவும், Super Mushshak என்ற போர் விமானங்களை விரைவாக வழங்கவும் வங்கதேசம் பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை முன்வைத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

வங்கதேசத்தில் வெடித்த போராட்டத்துக்கு பிறகு ஷேக் ஹசீனா ஆட்சி வெளியேற்றப்பட்டு இடைக்கால அரசு நாட்டை நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில் வங்கதேசத்தின் இடைக்கால அரசு பாகிஸ்தான் நாட்டுடன் தங்கள் உறவை வலுப்படுத்த தொடங்கியுள்ளது.
புதிய விமான சேவை
இதன் ஒரு பகுதியாக வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் கராச்சிக்கு வரும் 29ம் திகதி முதல் நேரடி விமான சேவையை வங்கதேச அரசு தொடங்க உள்ளது.
பாகிஸ்தான் - வங்கதேசம் இடையே கடந்த 2012ம் ஆண்டு விமான சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |