ஐபிஎல் போட்டியா? சொந்த நாடா? ஐபிஎல் கனவை நிராகரித்த வீரர்!
வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமதுவிற்கு அனுமதியை வழங்க மறுத்துள்ளது.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் இந்த மாதம் 26ம் திகதியில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது லக்னோ சூப்பர் ஜெய்ண்ட் மற்றும் குஜராத் டைட்டனஸ் என்ற இரண்டு புதிய அணிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு புதிதாக இணைக்கப்பட்டுள்ள லக்னோ சூப்பர் ஜெய்ண்ட் அணி, பிப்ரவரி மாதம் நடைபெற்ற வீரர்களுக்கான ஏலத்தில் அவுஸ்திரேலிய வீரர் மார்க் வுட்டை 7.5 கோடிக்கு வாங்கியது.
ஆனால் அவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார்.
இந்தநிலையில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட் அணி அவருக்கு மாற்றாக வங்கதேச வீரர் தஸ்கின் அகமதுவை அணியில் இணைத்துக்கொள்ள விரும்பி அவருடன் பேச்சுவார்த்தையில் இறங்கிய நிலையில் தஸ்கின் அஹமதுவுக்கான அனுமதியை வழங்க வங்கதேச கிரிக்கெட் அணி நிர்வாகம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் செயல்பாடுகளின் தலைவர் ஜலால் யூனுஸ் கூறும்போது இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடர் இருப்பதால் தஸ்கின் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை மேலும் இந்த சூழ்நிலை குறித்து அவரிடம் பேசியுள்ளதாகவும், அவர் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் முடித்துவிட்டு தாயகம் திரும்புவதாக தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி: அரையிறுதி கனவு தக்கவைப்பு