இந்தியாவில் உள்ள வங்கதேச முன்னாள் பிரதமருக்கு 6 மாதம் சிறை - என்ன காரணம்?
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவிற்கு சிறை
77 வயதான ஷேக் ஹசீனா 2009 முதல் ஆகஸ்ட் 2024 வரை வங்கதேச பிரதமராக இருந்தவர். இவர் வங்காளதேசத்தின் முதல் அதிபரான சேக் முஜிபுர் ரகுமானின் மகள் ஆவார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில், அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதை தொடர்ந்து, அவர் பாதுகாப்பு கோரி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
மாணவர் போராட்டங்களின் போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது தொடர்பாக, ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் (ICT) நடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகாத ஹசீனா மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனா இந்தியாவில் பாதுகாப்பான இடத்தில், தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை கைது செய்யவாய்ப்பில்லை.
எனவே அவர் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து, இந்த 6 மாத தண்டனை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |