இந்தியர்களின் வேலை அனுமதியை ரத்து செய்ய கோரும் வங்காளதேச பயங்கரவாத அமைப்பு
இந்தியர்களின் வேலை அனுமதியை ரத்து செய்ய வங்காளதேச பயங்கரவாத அமைப்பொன்று கோரியுள்ளது.
வங்காளதேசத்தில் அரசியல் சூழ்நிலை மேலும் பதற்றமடைந்துள்ளது.
அந்நாட்டின் தீவிரவாத அமைப்பு இன்கிலாப் மஞ்சா, இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட வேலை அனுமதிகளை ரத்து செய்யுமாறு இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் தலைமையிலான அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பு, பாகிஸ்தானிலிருந்து விடுதலை பெற்றபோது இந்தியா அளித்த உதவியை மறந்து, இன்று அதே அண்டை நாட்டுக்கு எதிராக விஷத்தைக் கக்குகிறது என விமர்சிக்கப்படுகிறது.

32 வயதான பயங்கரவாத தலைவர் ஷரீஃப் உஸ்மான் பின் ஹாடி தலைமையில் உருவான இந்த அமைப்பு, சமீபத்தில் முகமூடி அணிந்தவர்களின் துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அதிகமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.
இன்கிலாப் மஞ்சா, இந்தியர்களின் வேலை அனுமதிகளை ரத்து செய்வதோடு மட்டுமல்லாமல், இந்தியாவை சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) எதிர்த்து வழக்கு தொடருமாறும் யூனுஸ் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இந்த கோரிக்கை வங்காளதேச சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டில் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றைப் பற்றி அமைப்பு மௌனம் காத்து, இந்தியாவுக்கு எதிராக மட்டுமே பிரசாரம் செய்வது “இரட்டை நிலைப்பாடு” எனக் கூறப்படுகிறது.
பிப்ரவரி 2026-ல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, தீவிரவாதக் குழுக்கள் அதிகாரத்தைப் பிடிக்க முயற்சிப்பதால் வங்காளதேச ஜனநாயக அமைப்புகள் ஆபத்துக்குள்ளாகின்றன.
வங்காளதேச அரசாங்கம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்து, ஹாடி கொலைக்கான பொறுப்பை சுமத்தும் முயற்சிகளை இந்தியா கண்டித்துள்ளது.
இந்தச் சம்பவம், வங்காளதேசம் - இந்திய உறவுகள் மேலும் சிக்கலாகும் அபாயத்தை வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Bangladesh radical group Inqilab Mancha, Cancel Indian work permits Bangladesh, Muhammad Yunus interim government, India Bangladesh diplomatic tensions, Hindu minority attacks Bangladesh, Bangladesh election 2026 unrest, Sharif Osman Bin Hadi assassination, India rejects Bangladesh propaganda, Bangladesh political instability, India Bangladesh hostile relations