17 போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள்: 24 மணிநேரமும் மீனுக்கு இராணுவ பாதுகாப்பு- ஏன்?
வங்காளதேச அரசு, ஹில்சா மீனின் இனப்பெருக்க காலத்தில் அதனை பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஹில்சா வங்காளதேசதத்தின் தேசிய மீன் என்பதால், இம்முறை 17 போர்க்கப்பல்கள், ட்ரோன்கள், ரோந்து படகுகள், ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பயணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
22 நாட்கள் கொண்ட இந்த தடைக்காலம், அக்டோபர் 4 முதல் 25 வரை கடைபிடிக்கப்படுகிறது.
வங்காள விரிகுடா மற்றும் பத்மா, மேக்னா மற்றும் ஜமுனா போன்ற முக்கிய நதி அமைப்புகள் உட்பட நியமிக்கப்பட்ட இனப்பெருக்க மண்டலங்களில் உள்ள அனைத்து கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை ஹில்சா மேலாண்மை பிரிவின் துணை இயக்குநர் ஃபிரோஸ் அஹமது, "ஹில்சா மீனின் பாதுகாப்புக்காக நாங்கள் விரிவான கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இது அதன் இனப்பெருக்கத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை" என கூறியுள்ளார்.
வங்காளதேசதத்தின் தெற்கு பகுதியில் உள்ள பரிசால் மற்றும் சட்டோகிராம் மாவட்டங்களில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில், கடற்படை, கடலோர காவல் படை மற்றும் விமானப்படை உள்ளிட்ட 4 சிறப்பு படைகள் ஈடுபட்டுள்ளன.
கடந்த சில நாட்களில், தடை காலத்தில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடி வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வங்காளதேசம் உலகின் மிகப்பெரிய ஹில்சா உற்பத்தி நாடக இருந்தாலும், உள்ளூர் தேவை அதிகமாக இருப்பதால் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உள்ளன.
ஆனால், துராக் பூஜை காலத்தில் இந்தியாவுக்கு சிறப்பு அனுமதியுடன் ஹில்சா மீன் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
2025-ஆம் ஆண்டில் 1,200 டன் ஹில்சா மீனை இந்தியாவிற்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் ஏற்றுமதி குறைவாகவே இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Bangladesh Hilsa fish protection, Hilsa breeding season, Bangladesh Navy warships Hilsa, Hilsa fish conservation, Hilsa fishing ban, Hilsa surveillance drones, Mother Hilsa campaign Bangladesh