பயங்கரமான ரசாயனங்களுடன் சிக்கிய மர்மக் கப்பல்
Mystery Bangladesh bound ship from China carrying chemicals seized: பயங்கர ரசாயனங்களுடன் சீனாவிலிருந்து வங்கதேசம் நோக்கிப் புறப்பட்ட மர்மக் கப்பல் ஒன்றை இந்தோனேசிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளார்கள்.
சீனாவிலிருந்து வங்கதேசத்திற்குச் சென்று கொண்டிருந்த, எம்.வி. ஸ்டார் லைன்' (MV Star Line) என்ற சரக்குக் கப்பலை, இந்தோனேசிய கடற்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பயங்கரமான ரசாயனங்களுடன் சிக்கிய கப்பல்
சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் மற்றும் போலியான ஆவணங்கள் காரணமாக, வடக்கு சுமத்ராவின் Belawan கடற்பகுதியில் இந்தக் கப்பல் மடக்கிப் பிடிக்கப்பட்டது.

இந்தோனேசிய அதிகாரிகள் கப்பலை சோதனையிட்டபோது, கப்பலிலிருந்த 15 கண்டெய்னர்களில், ஏவுகணை மற்றும் ராக்கெட் எரிபொருள் தயாரிக்கப் பயன்படும் 405 டன் சோடியம் பெர்குளோரேட் (Sodium Perchlorate) என்ற ரசாயனமும், பதிவு செய்யப்படாத மில்லியன் கணக்கான 4G சிம் கார்டுகளும் இருந்தது தெரியவந்தது.
சந்தேகத்திற்கான காரணம்
கொமோரோஸ் (Comoros) நாட்டுக் கொடியுடன் பயணித்த இந்தக் கப்பல், தனது வழக்கமான வழித்தடத்தை விட்டு விலகிச் சென்றதோடு, ரேடியோ தகவல் தொடர்புகளுக்கும் பதிலளிக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த இந்தோனேசிய அதிகாரிகள் கப்பலை சோதனையிட்டுள்ளனர்.
இந்நிலையில், கப்பலைக் கைப்பற்றியுள்ள அதிகாரிகள், அந்த சரக்குகள் யாருக்கு அனுப்பப்பட்டன என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், கைப்பற்றப்பட்ட ரசாயனத்தைக் கொண்டு சுமார் 100 ஏவுகணைகளைத் தயாரிக்க முடியும் என இந்தோனேசிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.