இந்தியா பாகிஸ்தானை தாக்கினால்... வடகிழக்கை கைப்பற்ற வங்கதேசம் சதித்திட்டம்!
இந்தியா பாகிஸ்தானை தாக்கினால், வங்கதேசம் இந்தியாவின் வடகிழக்கை கையகப்படுத்தவேண்டும் என வங்கதேச முன்னாள் ராணுவ அதிகாரி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததையடுத்து, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்ற பரப்புரை சூடுபிடித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, வங்காளதேச ராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரலும், தேசிய சுயாதீன ஆணையத் தலைவருமான ஏ.எல்.எம். ஃபஸ்லுர் ரஹ்மான் (ALM Fazlur Rahman) பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
“இந்தியா பாகிஸ்தானை தாக்கினால், பங்களாதேஷ் இந்தியாவின் வடகிழக்கு ஏழு மாநிலங்களையும் கைப்பற்றி விட வேண்டும்,” என அவர் தனது முகநூல் (Facebook) பதிவில் கூறியுள்ளார்.
மேலும், இதற்காக சீனாவுடன் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது, வங்கதேச அரசின் தலைமை ஆலோசகராக உள்ள முஹம்மது யுனுஸுக்கு (Muhammad Yunus) நெருக்கமானவர் கூறிய கருத்தாக இருப்பது இந்தியாவை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதற்கு முந்தைய மாதங்களில், யுனுஸ் சீனாவில் பேசிய போது, “இந்தியாவின் ஏழு மாநிலங்கள் கடல் பாதை இல்லாத நிலப்பகுதியாகவே உள்ளன. அந்த பகுதியின் கடல் வாசல் என்பது வங்கதேசம் மட்டுமே” என கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சையான பேச்சுக்கு பதிலளிக்கும்விதமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர், “வடகிழக்கு இந்தியா BIMSTEC இணைப்பு மையமாக உருவாகி வருகிறது” என குறிப்பிட்டார்.
இந்தியாவும் வங்கதேசமும் தற்போது பரஸ்பர உறவுகளை மேம்படுத்த முயற்சி எடுத்து வரும் நிலையில், ரஹ்மானின் இந்த பேச்சு இருநாட்டு உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Bangladesh India conflict, ALM Fazlur Rahman Facebook, Northeast India tension, Bangladesh China military ties, Muhammad Yunus China visit, India Bangladesh Yunus statement, India Bangladesh diplomatic strain, Seven sisters India, BIMSTEC India northeast, India Bangladesh trade route issue