ஜிம்பாப்வேவாக மாறிய அவுஸ்திரேலியா! மரண அடி கொடுத்த வங்கதேசம்: வச்சு செய்யும் நெட்டிசன்கள்
வங்கதேச அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியில், அவுஸ்திரேலியா அணி மிகவும் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.
மேத்யூவேட் தலைமையிலான அவுஸ்திரேலியா அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற நான்கு போட்டிகளில் வங்கதேசதம் 3-1 என்று முன்னிலையுடன் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
இதையடுத்து, இரு அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
அதன் படி டாஸ் வென்று முதலில் ஆடிய வங்கதேச அணிக்கு துவக்க வீரர்களான மஹடி ஹசைன் 13 ஓட்டங்களிலும், மொகமது நயீம் 23 ஓட்டங்களிலும், இவர்களைத் தொடர்ந்து ஷகிப் அல் ஹசன்(11), சவுமியா சர்கார்(16) மற்றும் மகமதுல்லா(19) என அடுத்தடுத்து வெளியேற, இறுதியாக வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்கள் எடுத்தது.
அவுஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக நாதன் எல்லிஸ் மற்றும் டேன் கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 123 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி, வங்கதேச அணியின் பந்து வீச்சை தாக்க பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.
அணியின் தலைவரான மேத்யூ வேட்(22) மற்றும் பென் டேம்மெக்கார்ட்(17) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தை கூட தாண்டவில்லை.
இதனால் அவுஸ்திரேலியா அணி 13.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 62 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் வங்கதேச அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை வங்கதேச அணி 4-1 என்று கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.
#BANvAUS pic.twitter.com/Whj7AfKgW1
— Mohammad Ali Rplsc (@RplscAli) August 9, 2021
மேலும், வங்கதேச அணிக்கெதிரான தொடரை இழந்த அவுஸ்திரேலியா அணியை ரசிகர்கள் இணையத்தில் மீம்ஸ் மூலம் கிண்டல் செய்து வருகின்றனர்.
அதில் குறிப்பாக இணையவாசி ஒருவர் அவுஸ்திரேலியாவாக வந்த அந்த அணி, இப்போது ஜிம்பாப்வேவாக செல்வது போன்ற மீம்ஸ் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளது, அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.