இங்கிலாந்து வங்கியின் 400,000 தங்கக் கட்டிகள் பாதுகாப்பற்ற நிலையில்
சம்பளப் பிரச்சினை காரணமாக பாதுகாப்புப் படையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதை அடுத்து இங்கிலாந்து வங்கியின் சுமார் 200 பில்லியன் பவுண்டு மதிப்பிலான தங்கக்கட்டிகள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பற்ற நிலை
யூனியன் யுனைட் தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 40 பாதுகாப்புக் காவலர்கள் அடுத்த மாதம் வெளிநடப்பு செய்ய உள்ளனர், இதனால் இங்கிலாந்து வங்கி பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட உள்ளது.

இவர்களே, வங்கியின் 400,000 தங்கக் கட்டிகளைப் பாதுகாப்பாகப் பூட்டி வைக்க உதவும் காவலர்கள். நவம்பர் 13 ஆம் திகதி காலை 7 மணி முதல் 24 மணி நேரம் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தொழிற்சங்கம் புதன்கிழமை அறிவித்தது.
இங்கிலாந்து வங்கியின் கட்டுப்பாட்டு அறை உட்பட மொத்த பாதுகாப்புக்கும் பொறுப்பான ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பு நிறுவனமான அமுலெட்டில் இருந்து பணியமர்த்தப்படுகிறார்கள்.
200 பில்லியன்
இங்கிலாந்து வங்கியின் பெட்டகங்களில் 200 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க இருப்புக்கள் பாதுகாக்கப்படுகின்றன. இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய பெட்டகமாகும்.

இந்த ஆண்டு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க இங்கிலாந்து வங்கி மறுத்ததை அடுத்தே இந்த சர்ச்சை எழுந்தது. ஆனால், அமுலெட் நிறுவனமும் இங்கிலாந்து வங்கியும் இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்க இன்னும் நேரமிருப்பதாகவும் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        