ஆப்கானிஸ்தானை ஆளப்போவது இவர் தான்! கசிந்த முக்கிய தகவல்
ஆப்கானிஸ்தான் புதிய அரசாங்கத்தை முல்லா பராதர் தலைமையாக இருந்து வழிநடத்துவார் என தலிபான் வட்டாரஙகள் தகவல் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் விரைவில் புதிய அராங்கம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, தலிபான் ஈரான் அரசியல் முறையை பின்பற்று உள்ளதாகவும், உச்ச தலைவரை உயர் அதிகாரியாக நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், புதிய அரசாங்கத்தின் உச்ச தலைவராக Mullah Hebatullah Akhundzada அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவரான முல்லா பராதர் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை வழிநடத்துவார் என்று தலிபான் வட்டாரங்கள் கூறுகின்றன.
மறைந்த தலிபான் நிறுவனர் முல்லா உமரின் மகன் முல்லா முகமது யாகூப் மற்றும் ஷேர் முகமது அப்பாஸ் Stanekzai ஆகியோர் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.