20 ஆண்டுகளுக்கு பிறகு முடி திருத்தம் செய்து கொண்ட நபர்! சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஒரே மாதிரியான முடிவெட்டு முறையை செய்து வந்த இளைஞருக்கு புதிய அழகியலுடன் முடி திருத்தம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
கசப்பான அனுபவம்
கடந்த இருபது ஆண்டுகளாக ஒரே மாதிரியான முடி திருத்தும் முறையை செய்து கொண்டு வந்த ஒரு வாடிக்கையாளருக்கு நிகழ்ந்த வித்தியாசமான புதிய மாற்றத்தை ரிச்மண்ட் பார்பர்(Richmond Barber) என்ற பிரபல TikTokகர் தனது 1.3 மில்லியன் பின்பற்றுவோருக்கு பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் வாடிக்கையாளர், மற்ற முடி திருத்தும்(பார்பர்) கடைகளில் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் காரணமாக புதிய முடி திருத்தும் முறைகளை முயற்சிக்க தயங்கியதாக வெளிப்படுத்தினார்.
Mannnn lmaooo haircuts are insane for men like who tf is that pic.twitter.com/cCaCP8nX5P
— Gabby ?? (@lilloudsnack) April 12, 2024
வாடிக்கையாளர் பெரும்பாலும் நேரம் தவறி பார்பர் கடையை பார்வையிடுவதால் தாமதமான நேரத்தால், அடிக்கடி திருப்பி அனுப்பப்படுவார் அல்லது குறைந்த கவனத்துடன் முடி திருத்தம் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக முடி திருத்துவதில் ஊக்கமிழந்து போன வாடிக்கையாளர் பல ஆண்டுகளாக ஒரே மாதிரியான முடி திருத்தத்தை செய்து வந்துள்ளார். மேலும் அதை மறைக்க தொப்பியும் அணிய தொடங்கியுள்ளார்.
வைரல் வீடியோ
இதையடுத்து ரிச்மண்ட் பார்பரின் TikTok சேனலைக் கண்டுபிடித்து அவரது அற்புதமான வேலையைப் பார்த்த பிறகு, வாடிக்கையாளர் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பயண் செய்து அவரது பார்பர் கடையை அடைந்துள்ளார்.
வாடிக்கையாளர் தனது முடி திருத்தும் பழைய பாணியிலிருந்து நவீன, ஸ்டைலான தோற்றத்திற்கு மாற்றியபோது, பார்பரின் திறமை உடனடியாக தெளிவாகத் தெரிந்தது.
ஊக்கமிழந்து போன வாடிக்கையாளரும் தன்னுடைய புதிய முடி திருத்தத்தில் மகிழ்ச்சியடைந்த தோடு, ரிச்மண்ட் பார்பருக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்த முடிவெட்டு அவருக்கு புதிய நம்பிக்கையை அளித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதுடன் பார்வையாளர்கள் பார்பரின் பார்பரின் திறமையாக வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |