ஆரஞ்சு பழப் போர்…மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இத்தாலியில் களைகட்டிய திருவிழா
இத்தாலியில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடத்தப்படும் ஆரஞ்சு பழ சண்டை இந்த முறையும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆரஞ்சு பழச் சண்டை
இத்தாலியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆரஞ்சு பழ சண்டை விழா, கோவிட் தொற்று காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இம்முறை கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பிப்ரவரியில் வரலாற்று நகரமான ஜவோரியாவில் மிகுந்த உற்சாகத்துடன் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
pinterest
குதிரை வண்டியில் பழங்கால படை வீரர்களின் ஆடைகளை அணிந்து வரும் நபர்கள் கூடியிருக்கும் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரின் மீதும் ஆரஞ்சு பழங்களை எறிந்து தாக்குகின்றனர்.
இதற்கு பதிலுக்கு மக்களும் அவர்கள் மீது ஆரஞ்சு பழங்களை வீசி எறிந்து மகிழ்கின்றனர்.
ஆரஞ்சு போர் வரலாறு
இத்தாலியின் இவ்ரியா தீய கொடுங்கோல் பிரபுவால் 1100 களில் ஆளப்பட்டு வந்த நிலையில், அதன் டியூக் ஒரு இளம் மில்லர் மகளின் திருமண இரவில் அவளைத் தாக்க முயன்றதாக புராணக்கதை தெரிவிக்கின்றன.
pinterest
ஆனால் அந்த இளம் பெண் டியூக்-கின் தலையை துண்டித்து ஒரு புரட்சியை தொடங்கினாள், அவளை பின்தொடர்ந்து இவ்ரியாவின் மக்கள் அரண்மனையை தாக்கி தகர்கின்றனர்.
இந்த புரட்சியை இவ்ரியா மக்கள் நினைவு கூறும் விதமாகவே ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் இந்த விழாவை இத்தாலி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
pinterest