கனடாவில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்
கனடாவில் பறவைக்காய்ச்சலால் பாதிப்புக்குள்ளான நபர் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிக்கலை ஏற்படுத்தலாம்
கனடாவிலேயே பறவைக்காய்ச்சலால் பாதிப்புக்கு உள்ளாகும் முதல் நபர் என்றும் நம்பப்படுகிறது. பறவைக்காய்ச்சல் பாதிப்புக்கு முன்னர் ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், மருத்துவமனை சிகிச்சை எதுவும் சமீபத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அந்த நபர் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளையோருக்கு இந்த நோய் பாதிக்கப்பட்டால், அது சிக்கலை ஏற்படுத்தலாம் என்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை பிரிட்டிஷ் கொலம்பியாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல் முறையாக இளம் வயது நபர் ஒருவருக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்துள்ளதாக அறிவித்தனர்.
மேலும் அந்த நபருக்கு பாதிக்கப்பட்டுள்ளது H5N1 வகையாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, H5N1 வகையானது மனிதர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தாது என்றும், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என்பதில் எந்த ஆதாரமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் அமெரிக்காவில் கால்நடைகள் உட்பட அதிக எண்ணிக்கையிலான விலங்குகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் பாதிக்கப்பட்டுள்ள நபர் தொடர்பில், அவரது பாலினம் அல்லது வயது குறித்த தகவல் எதையும் வெளியிட சுகாதாரத்துறை அதிகாரிகள் மறூத்துள்ளனர்.
நவம்பர் 2ம் திகதி அறிகுறிகள் தென்பட்டதாக கூறும் அதிகாரிகள், 8ம் திகதி பரிசோதனை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது காய்ச்சல் மற்றும் இருமல் காணப்பட்டுள்ளது.
மூன்று டசின் நபர்கள்
ஆனால் செவ்வாய்க்கிழமை கடுமையான சுவாசக் கோளாறு காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பாதிப்புக்குள்ளான இளம் வயது நபர் பொதுவாக நாய், பூனை மற்றும் ஊர்வனவற்றுடன் பழகுபவர் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, பொது சுகாதார அதிகாரிகள் சுமார் மூன்று டசின் நபர்களை அடையாளம் கண்டு சோதனை செய்தனர். ஆனால் வைரஸால் பாதிக்கப்பட்ட எவரும் கண்டறியப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக மட்டுமே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 15 அமெரிக்க மாகாணங்களில் பறவைக் காய்ச்சலால் கிட்டத்தட்ட 450 பால் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் முதல் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 46 நபர்களை CDC கண்டறிந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டும் 26 பகுதிகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கனடாவில் பால் பண்ணைகளில் இதுவரை பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை மற்றும் பால் மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றே சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |