கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசு தொகை அறிவித்த பிசிசிஐ - எத்தனை கோடி தெரியுமா?
ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ பரிசு தொகை அறிவித்துள்ளது.
கோப்பை வென்ற இந்தியா
2025 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த தொடரில், ஒரு போட்டிகளில் கூட தோல்வியடையாமல் இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.
இதன்மூலம், இந்திய அணி 9வது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
பிசிசிஐ பரிசுத்தொகை
இதைத்தொடர்ந்து, இந்திய அணியை ஊக்குவிக்கும் வகையில், ரூ.21 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொகை அணி வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
ஆசிய கோப்பை வென்றதற்கு கிடைக்கும் பரிசுத்தொகையை விட பிசிசிஐ அறிவித்துள்ள பரிசுத்தொகை 8 மடங்கு அதிகம் ஆகும்.
ஆசிய கோப்பையை வென்ற அணிக்கு வெற்றிக்கான பரிசுத்தொகையாக ரூ2.6 கோடி கிடைக்கும். அதே போல் 2வது இடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு ரூ.1.3 கோடி கிடைக்கும்.
தொடர் நாயகன் விருது பெற்ற அபிஷேக் சர்மா, ரூ.13 லட்சம் மற்றும் ஒரு SUV கார் பெறுவார்.
தொடரின் மதிப்புமிக்க வீரர் விருது வென்ற குல்தீப் யாதவ் ரூ.13 லட்சம்பெறுவார்.
இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற திலக் வர்மாவும், Gamechanger of the Match விருது பெற்ற சிவம் துபேவும் தலா ரூ4.4 லட்சம் பெறுவார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |