கெத்தாக நிற்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி! பயத்தில் ஒளிந்து கொண்ட புடின்... வெளியான புகைப்படம்
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் நிலையில் பிரித்தானிய பிரதமர் போரீஸ் அங்கு சென்று ஜெலன்ஸ்கியை சந்தித்த புகைப்படம் வெளியானதையடுத்து புடின் அச்சத்தில் ஒளிந்து கொண்டது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை உக்ரேனிய எம்.பி லிசியா வசிலிங்கோ வெளியிட்ட நிலையிலேயே அது பெரியளவில் வைரலாகியுள்ளது.
உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடன் கீவ் நகர தெருக்களில் நடந்து பார்வையிட்டார்.
Oh yes! Be afraid, be very afraid! And your super big table will not save you #putin! pic.twitter.com/QwVTkKpIUf
— Lesia Vasylenko (@lesiavasylenko) April 10, 2022
போரீஸ் வருகையால் செலன்ஸ்கி கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளார். இந்நிலையில் போரீஸ், ஜெலன்ஸ்கி உக்ரைன் சாலையில் நடந்து செல்லும் புகைப்படத்தையும், அதை பார்த்து புடின் பயத்தில் தனதுக்கு விருப்பமான டேபிளின் கீழ் பதுங்குவது போன்ற புகைப்படத்தையும் லிசியா வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ஆமாம்! பயப்படுங்கள்.. உங்களின் டேபிள் உங்களை காப்பாற்றாது என பதிவிட்டுள்ளார்.
அதாவது, தொடக்கத்தில் தனித்து விடப்பட்ட உக்ரைனுக்கு தற்போது பிரித்தானியா நேரடி ஆதரவை கொடுப்பது போரீஸ் வருகை மூலம் உறுதியாகியுள்ளது, இதனால் புடின் பீதியில் உள்ளார் என்பதை அவர் சொல்லாமல் சொல்லியுள்ளார்.