உக்ரைன் புச்சா நகர் படுகொலைகள்! பெண்கள் சடலங்களை தோண்டி எடுத்த தடயவியல் நிபுணர்கள் கண்ட காட்சி
உக்ரைனின் புச்சா நகரில் கொடூரமாக கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட நபர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா 46வது நாளாக போர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக புச்சா நகரில் அப்பாவி மக்கள் 400 பேரை ரஷ்ய வீரர்கள் துன்புறுத்தி கொடூரமாக கொன்றனர்.
தடயவியல் புலனாய்வாளர்கள்
அவர்களின் சடலங்கள் கொத்து கொத்தாக புதைக்கப்பட்டது. இந்நிலையில் தடயவியல் புலனாய்வாளர்கள் புச்சாவில் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுக்கும் பணியை மேற்கொண்டனர்.
அந்த உடல்கள் கருப்பு ப்ளாஸ்டிக் கவரில் போர்த்திபடி வெளியில் வைக்கப்பட்டது. முதல் 20 சடலங்களை தோண்டி எடுக்கும் போதே தடயவியல் நிபுணர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
மோசமான நிலையில் உடல்கள்
ஏனெனில் அதில் அனைவர் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தது. இறந்தவர்களில் இரண்டு பெண்கள் அங்குள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
மற்றொருவரின் விரல் நுனிகள் கருப்பு நிறமாக மாறியிருந்தது. ஒரு பெண்ணின் மண்டை ஓட்டின் ஒரு பெரிய பகுதியைக் காணவில்லை, மற்றொரு உடல் மிகவும் மோசமாக எரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. அவரது தலை மற்றும் அவரது உடற்பகுதியில் பாதி மட்டுமே இருந்தது.
அப்பகுதியில் தொடர் மழை பெய்வதால் உடல்களை தோண்டி எடுக்கும் பணி அவ்வபோது தடைபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.