உக்ரைனில் வீட்டிற்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள் வெட்கமே இல்லாமல் செய்த செயல்! சிசிடிவி புகைப்படங்கள் வெளியானது
உக்ரைனில் உள்ள வீடுகளில் இருந்து வெட்கமே இல்லாமல் திருடிய பொருட்களை ரஷ்ய வீரர்கள் தங்கள் குடும்பத்தாருக்கு அனுப்பி வைத்த நிலையில் பலரும் அதை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
உக்ரைனுக்குள் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி புகுந்த ரஷ்ய வீரர்கள் தொடர் போர் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். ரஷ்ய வீரர்களின் அராஜகத்தால் உக்ரைன் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் பெண்கள், சிறுமிகள் சீரழிக்கப்படும் கொடூரங்களும் அதிகளவில் அரங்கேறுகிறது. உக்ரைனின் புச்சா நகரில் 400க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் ரஷ்ய துருப்புகளால் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
The Russian soldier Yevgeny Kovalenko sent home 17 packages from Belarus to Russia, weighing a total of 440 kg.
— UKRAINIAN WAR (@ukrainianwar24) April 10, 2022
How does it feel to be known for your looting for the rest of your life Yevgeny?#Ukraine #Russia #Russian #Kyiv pic.twitter.com/zDj6mgq5So
இதையும் படிங்க: உக்ரைனில் 14 வயது சிறுமி கர்ப்பம்! 5 ரஷ்ய வீரர்களை அம்பலப்படுத்திய பெண் எம்.பி
இந்த தாக்குதலின் போது புச்சா நகரில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள் கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டனர். துணிகள், தொலைக்காட்சி பெட்டிகள், டேபிள்கள், ஓடியோ ஸ்பீக்கர்கள் போன்ற பல பொருட்களை வெட்கமே இல்லாமல் கொள்ளையடித்தனர்.
இந்நிலையில் கொள்ளையடித்த பொருட்களை பெலாரஸில் உள்ள கொரியர் அலுவலத்தில் வந்து கொடுத்த ரஷ்ய வீரர்கள் ரஷ்யாவில் உள்ள குடும்பத்தாருக்கு அதை அனுப்பியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி ரஷ்ய வீரர் யுவ்கெனி கோவ்லங்கிகோ 440 கிலோவில் 17 பாக்கெட்களில் பொருட்களை தனது மனைவிக்கு அனுப்பினார். இது குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதை சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர், அந்த பதிவில், யுவ்கெனி, உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒரு திருடனாக அறியப்படுவதை எப்படி உணர்கிறீர்கள் என பதிவிடப்பட்டுள்ளது.