கரடிக்கு மரண தண்டனை வழங்க தற்காலிக தடை! இத்தாலி நீதிமன்றம் உத்தரவு: பின்னணி என்ன?
இத்தாலியில் ஓட்ட பயிற்சி செய்து கொண்டு இருந்த பெண்ணை கொன்ற கரடியை மே 11ம் திகதி வரை தூக்கிலிட தடை விதிப்பதாக ட்ரெண்டோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரடிக்கு தூக்குத் தண்டனை விதிப்பு
இத்தாலியின் ட்ரெண்டினோ-ஆல்டோ அடிஜ்(Trento) பகுதியில் உள்ள பொது இயற்கை காப்பகத்தில் ஜாகிங் செய்து கொண்டிருந்த 26 வயதான ஆண்ட்ரியா பாப்பி-யை கரடி ஒன்று தாக்கியது.
இதில் காயமடைந்த ஆண்ட்ரியா பாப்பி பின் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து வடக்கு இத்தாலியின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைல்ட் ஃபுனாவில் (பொதுவாக கயா என அழைக்கப்படும்) ஜேஜே4 என்ற 17 வயது கரடிக்கு மரணத் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Trento Provincial Press Office
தண்டனை ஒத்திவைப்பு
இந்நிலையில், கரடியைப் பாதுகாக்க நீதிமன்றத்தில் வனவிலங்கு பாதுகாப்பு முகவர்கள் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்து இருந்தனர்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றத்தில், விதிக்கப்பட்டுள்ள மரணத் தண்டனை உத்தரவு “கரடிக்கு எதிரான பழிவாங்கும் சைகை போல் தோன்றுகிறது” என தெரிவிக்கப்பட்டது.
மேலும் கரடியின் ஆக்ரோஷமான செயல் தனது குட்டிகளுக்கு எதிரான அச்சுறுத்தல் உடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு புகாருக்கு பதிலளிக்கும் விதமாக ட்ரெண்டோ தீர்ப்பாயம், பெண்ணை கொன்ற கரடியை மே 11ம் திகதி வரை தூக்கிலிட தடை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில், பல கரடி தாக்குதல்கள் இத்தாலியில் பதிவாகியுள்ளன, இதில் 2014 ஆம் ஆண்டில் காளான் விவசாயி ஒருவரின் மரண தாக்குதல் மற்றும் 2020 ஆம் ஆண்டு நடைபயணத்தின் போது ஒரு தந்தையும் மற்றும் அவரது மகனும் தாக்கப்பட்டனர்.