உலகின் கொரோனா பரவல் தலைநகரமாகும் பிரபல நாடு: எகிறும் பாதிப்பு எண்ணிக்கை
கொரோனா நான்காவது அலை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை நாளும் அதிகரித்து வருவதால் உலகின் கொரோனா தலைநகராக மாறியுள்ளது இஸ்ரேல்.
இஸ்ரேலில் பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டும், நாளும் பாதிப்பு எண்ணிக்கை உச்சம் பெற்று காணப்படுகிறது.
புதன்கிழமை வெளியான ஆய்வு ஒன்றில், மொத்தமுள்ள மக்கள் தொகையில் ஒரு மில்லியன் மக்களில் 1,892 பேர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மங்கோலியாவை விட கணிசமான வகையில் அதிகமாக இருந்தது, அங்கு ஒரு மில்லியனுக்கு 1,119 பேர்களில் பாதிப்பு கண்டறியப்பட்டது,
அதைத் தொடர்ந்து கொசோவோவில் 980 பேர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இஸ்ரேலில் 69% மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளும் அதிகரித்து காணப்படுகிறது.
இருப்பினும் இரண்டாவது அலையுடன் ஒப்பிடுகையில் மரண எண்ணிக்கை பெருமளவு குறைந்தே காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி அளிக்கும் பணிகளும் இஸ்ரேலில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.