மலையில் நிகழ்ந்த இரட்டை சரிவு: நேபாள பேரழிவிற்கு பனிப்பாறை சரிவு மட்டும் காரணம் இல்லை
Uncovers Bedrock Collapse is Behind the Reasons of Nepal's Devastating Floods: நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கிற்கு பனிப்பாறை உடைப்பு மட்டும் காரணம் இல்லை என்று புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் விளக்கியுள்ளன.
நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கிற்கு பனிப்பாறை உடைப்பு(Glacier Collapse) மட்டும் காரணம் இல்லை என்றும் பனிப்பாறைக்கு கீழே இருந்த பாறை பாளமும்(underlying bedrock) பெரிய அளவில் சரிந்ததே காரணம் என்று வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
புதன்கிழமை வெள்ளப்பெருக்கின் போது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மேகங்கள் மற்றும் குப்பைகளால் மூடப்பட்டிருந்ததால், லாங்தாங் லிரூங்(Langtang Lirung) சிகரத்தின் அருகில் இருந்த பனிப்பாறை பகுதி மட்டும் உடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் தற்போது எடுக்கப்பட்ட தெளிவான செயற்கைக்கோள் புகைப்படங்களில், மேலே இருந்த பனிப்பாறைகளுடன் அடியில் இருந்த பாறைகளும் சரிந்து விழுந்ததே ராட்சத வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
தீ விக்(The Week) நாளிதழில் வெளியான அறிக்கையில் கல்கரி பல்கலைக்கழக இணைப் பேராசிரியரான டான் சுகர்(Dan Shugar) இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
அழிவின் பாதை)) பாறை மற்றும் பனிக்கட்டியின் மிகப்பெரிய பகுதி பள்ளத்தாக்கின் தரையில் விழுந்து மோதியது, அப்போது செங்குத்தான மற்றும் குறுகிய நிலப்பரப்பு குப்பைகள் மற்றும் இடிபாடுகளின் வேகத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஆனால் உருகிய பனியின் நீரோட்டமானது வெள்ள நீருக்கு மேலும் வலுசேர்த்தது சேரும் தண்ணீருமாக மாபெரும் வெள்ளப் பெருக்காக மாற்றியது.
Vantortech imagery shows the Rasuwagadhi crossing between Nepal and China completely wiped out by the glacial flood.
— Open Source Intel (@Osint613) August 27, 2026
359+ people are dead and nearly 1,000 remain missing.
This is the crossing, it’s gone. pic.twitter.com/obmTgUWMwK
விரைவான பனி உருகுதலே இந்த பனிப்பாறை வெடிப்பிற்கான காரணம் என்று விஞ்ஞானிகள் முதலில் கூறினர்.
ஆனால் பனி மற்றும் பாறை கலவைகள் சரிவே இந்த பேரழிவுக்கு காரணம் என்று சர்வதேச ஒருங்கிணைந்த மலைப்பகுதி மேம்பாட்டு மையம் (ICIMOD) விளக்கியுள்ளது.
பனி மற்றும் பாறை சரிவுக்கு பல ஆராய்ச்சியாளர்கள் பருவநிலை மாற்றமே காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |