கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்: கைகோர்க்கும் தென் கொரியா-பிரான்ஸ் நாடுகள்
South Korea and France Strengthen their Partnership: தென் கொரியா - பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு கூட்டுறவு தொடர்பான முக்கிய ஒத்துழைப்புகள் ஏற்பட்டுள்ளன.
தென் கொரியா - பிரான்ஸ் கூட்டுறவு
வட கொரியா மற்றும் ரஷ்யா இடையிலான ராணுவ உறவு வலுப்பெறும் நிலையில், தென் கொரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் தங்களது பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.
தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் கிம் ஹொங்-சியோல் மற்றும் பிரான்ஸ் ஆயுதப்படை அமைச்சகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் வியூகப் பிரிவு இயக்குநர் ஜெனரல் கியோம் ஒலாக்னியர் ஆகியோர் வெள்ளிக்கிழமையன்று பாரிஸில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு முக்கிய விவாதங்கள் நடத்தினர்.

இந்த சந்திப்பில் ஐரோப்பா மற்றும் கொரிய தீபகற்பம் ஆகிய பிராந்தியங்களில் எழுந்துள்ள புதிய பாதுகாப்பு சவால்கள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
அப்போது இந்தோ - பசிபிக் மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களின் பாதுகாப்பு விவகாரங்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக பிணைந்து இருப்பதால் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு பரிமாற்றங்கள், கூட்டு பயிற்சிகள் மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தல் ஆகியவற்றிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |