ட்ரம்பின் வரி யுத்தம்... அமெரிக்காவின் Boeing நிறுவனத்திற்கு தடை விதித்த சீனா
அமெரிக்க விமானப் பெருநிறுவனமான போயிங்கிலிருந்து விமானங்களை வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.
வாங்குவதை நிறுத்துமாறு
அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக யுத்தம் தீவிரமடைந்துவரும் நிலையிலேயே சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களும் வரி யுத்தத்தில் சிக்கித் தவிக்கின்றன.
அமெரிக்கா தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீதம் வரை வரி விதிக்கிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்க இறக்குமதிகள் மீது சீனாவும் 125 சதவீத வரிகளை விதித்துள்ளதுடன், மேலும் வரிகளை உயர்த்துவது அர்த்தமற்றது என்று நிராகரித்துள்ளது.
இந்த நிலையில் அதிரடியாக போயிங் விமானங்களின் விநியோகத்தை நிறுத்துமாறு சீனா தங்களது விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து விமானம் தொடர்பான உபகரணங்கள் மற்றும் பாகங்களை வாங்குவதையும் நிறுத்துமாறு சீனா அதன் விமான நிறுவனங்களுக்குக் கூறியுள்ளது.
அமெரிக்க இறக்குமதிகள் மீதான சீனாவின் பரஸ்பர வரிகள் விமானங்கள் மற்றும் பாகங்களை கொண்டு வருவதற்கான செலவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுத்திருக்கும்.
தலைகீழாக மாற்றியுள்ளது
மேலும், போயிங் ஜெட் விமானங்களை குத்தகைக்கு எடுத்து அதிக செலவுகளை எதிர்கொள்ளும் விமான நிறுவனங்களுக்கு உதவுவது குறித்து சீன அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்பு உலக சந்தைகளை உலுக்கியதோடு, நேசநாடுகள் மற்றும் மற்ற நாடுகளுடனான தூதரக உறவுகளையும் தலைகீழாக மாற்றியுள்ளது. திடீரென்று இரக்க குணம் கொண்டவராக மாறிய ட்ரம்ப் வரி விதிப்புகள் அனைத்திற்கும் 90 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.
ஆனால் சீனா மீதான வரி அமுலில் இருக்கும் என்றார். இந்த களேபரங்களுக்கு மத்தியிலும் ரஷ்யா மீது கரிசனம் காட்டியுள்ள ட்ரம்ப், 1 சதவீத வரி கூட புடின் நிர்வாகத்திற்கு எதிராக விதிக்கவில்ல என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |