பிரஸ்ஸல்ஸில் நடந்த பயங்கர துப்பாக்கி சூடு: 2 ஸ்வீடன் நாட்டவர் பலி: பொலிஸார் விசாரணை
பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
பெல்ஜியம் நாட்டில் துப்பாக்கி சூடு
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நேற்று மாலை திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று அரங்கேறியது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஊடக அறிக்கைகளின் படி, துப்பாக்கி சூடு நடத்தியவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், துப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
reuters
பிரதமர் இரங்கல்
துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரு, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள கருத்தில், பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற கோழைத்தனமாக துப்பாக்கி சூடு தாக்குதலில் கொல்லப்பட்டு இருவரின் குடும்பத்திற்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
AFP VIA GETTY IMAGES
நிலைமையை கண்டு வருந்துகிறோம், பிரஸ்ஸல்ஸ் மக்கள் பாதுகாப்பாகவும், விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |