20,000 கோடி யூரோ சொத்துக்கள் முடக்கம்! ஐரோப்பாவின் பொருளாதாரத்தில் பெரும் சேதம்
பெல்ஜிய வெளியுறவு அமைச்சர் மாக்சிம் ப்ரீவோட், ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 200 பில்லியன் யூரோ மதிப்புள்ள ரஷ்ய மத்திய வங்கி சொத்துக்களை முடக்கியுள்ளது அபாயத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
200 பில்லியன் யூரோ
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 200 பில்லியன் யூரோ மதிப்புள்ள ரஷ்ய மத்திய வங்கி சொத்துக்களை முடக்கியது.
அவற்றில் பெரும்பாலானவை பெல்ஜியத்தில் உள்ள சர்வதேச வைப்பு அமைப்பான Euroclearஆல் நடத்தப்படுகின்றன.
ஆனால் இந்த நடவடிக்கை ஐரோப்பாவின் பொருளாதாரத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக பெல்ஜிய வெளியுறவு அமைச்சர் மாக்சிம் ப்ரீவோட் (Maxime Prevot) எச்சரிக்கிறார்.
பொருளாதார சேத அபாயம்
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "உக்ரைன் போருக்காக 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் அசையாத ரஷ்ய மத்திய வாங்கி சொத்துக்களை பறிமுதல் செய்வதால் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் ஏற்படும்.
பெல்ஜியத்தைப் பொறுத்தவரை, ரஷ்ய இறையாண்மை சொத்துக்களை பறிமுதல் செய்வது ஒரு விருப்பமல்ல. சட்ட அல்லது நீதித்துறை முடிவால் அல்லாமல், ஒரு அரசியல் முடிவால் தூண்டப்பட்ட இத்தகைய பறிமுதல், அனைத்து ஐரோப்பிய நிதிச் சந்தைகளிலும் ஒரு பயங்கரமான முறையான அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
யூரோவின் நம்பகத்தன்மைக்கு கடுமையான அடியை ஏற்படுத்தும். இதனால் மிகவும் சிக்கலான டோமினா விளைவுகள் உண்டாகும்" என எச்சரித்துள்ளார்.
தவணைகளில்
ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆண்டு அதன் ஜி7 நாடுகளுடன் சேர்ந்து, முடக்கிய சொத்துக்களில் இருந்து ஈட்டப்படும் வட்டியைப் பயன்படுத்தி, உக்ரைனுக்கு 50 பில்லியன் டொலர் கடனை வழங்கியது. அது இன்னும் தவணைகளில் செலுத்தப்படுகிறது.
ஆனால், சொத்துக்களை முழுமையாக பறிமுதல் செய்வது அல்லது அதிக ஆபத்தான முதலீடுகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் தேடுவது உள்ளிட்ட பல விருப்பங்கள் குறித்து விவாதிக்கப்படும் நிலையில், பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இருந்து சொத்துக்களைப் பயன்படுத்த அழுத்தம் உள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |