உறைந்த பனியில் 4 நாட்கள் உரிமையாளருக்காக காத்திருந்த வளர்ப்பு நாய்: கவலையில் குடும்பத்தினர்!
உரிமையாளர் இறந்த இடத்தில் அவருக்காக காத்திருக்கும் நாயின் அன்பு அனைவரையும் மனம் உருக வைத்துள்ளது.
நாயின் அசைக்க முடியாத அன்பு
பெல்கா(Belka) என்ற ரஷ்ய நாய் ஒன்று, தனது உரிமையாளர் உயிரிழந்த இடத்தில் காவல் காத்து, அவர்களுக்கிடையேயான அசாதாரணமான பிணைப்பை நிருபித்துள்ளது.
சைக்கிள் ஓட்டும் ஆர்வலரான 59 வயது நபர் ஒருவர் பாஷ்கார்டோஸ்தானில்(Bashkortostan) உள்ள உஃபா நதி(Ufa River) மெல்லிய பனிக்கட்டியில் விழுந்து மரணமடைந்தார்.
அவரை உயிருடன் மீட்க மீட்புக் குழுக்கள் சிறந்த முயற்சிகளை செய்த போதிலும், முயற்சிகள் தோல்வியடைந்து அவரை காப்பாற்ற முடியாமல் போனது.
உரிமையாளர் தாங்க முடியாத பிரிவுக்கு பிறகு அவரது வளர்ப்பு நாயான பெல்கா நதிக்கரையை விட்டு வெளியேற மறுத்துள்ளது.
உரிமையாளரின் பெற்றோர் பெல்காவை வீட்டிற்கு அழைத்து சென்ற பிறகும், உரிமையாளர் உயிரிழந்த இடத்திற்கு பெல்கா தொடர்ந்து திரும்பி வரத் தொடங்கியுள்ளது.
மேலும் பெல்கா உரிமையாளர் திரும்பி வருவதற்காக உறைந்த பனிக்கட்டியில் 4 நாட்கள் பொறுமையாகக் காத்திருந்துள்ளது.
இணையத்தில் வைரல்
இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் Brut America-வால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதை அடுத்து பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
பலர் பெல்காவின் அசைக்க முடியாத அன்பு மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டி தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பெல்காவின் கதை, தனது இறந்த உரிமையாளருக்காக பல ஆண்டுகள் ரயில் நிலையத்தில் காத்திருந்த புகழ்பெற்ற ஜப்பானிய நாய் ஹாச்சிகோவின் கதையுடன் ஒப்பிடப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |